இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் அப்டேட்!
ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
Advertisement
இதையும் படிக்க: 3டியில் வெளியாகும் ஆதிபுருஷ் டிரைலர்
இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையிரங்கில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.