முகப்பு
செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய வடிவேலு!

மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாடலை பதிவு செய்த புகைப்படங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:

மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாடலை பதிவு செய்த புகைப்படங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.   

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலானது சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், “நமது வைகைப்புயல் வடிவேலுவின் பாடல் பதிவு செய்யப்பட்டது. இந்த அமர்வை மிகவும் நகைச்சுவையாகவும், மறக்கமுடியாத நினைவாகவும் அவர் மாற்றினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →