ஜெயம் ரவி பிரபல இயக்குநர் நடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாண்டிராஜ். பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தொடர்ந்து மெரினா, கதகளி, நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் போன்ற நல்ல திரைப்படங்களை இயக்கினார்.
இறுதியாக நடிகர் சூர்யாவை வைத்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை எடுத்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.