லியோ படத்திற்காக நடிகர்கள் விஜய், அர்ஜுனுக்கு இடையேயான சண்டைக்காட்சி படப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கஸ்டடி படத்தின் மிரள வைக்கும் மேக்கிங் விடியோ வெளியீடு
மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படப்பிடிப்பில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அர்ஜுன் கலந்துகொண்டதாகவும் விஜய்க்கும் அவருக்கும் இடையேயான சண்டைக்காட்சி படப்பிடிக்கப்பட்டதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.