முகப்பு
செய்திகள்

சலார் ரிலீஸ் தேதி மாற்றமா?

சலார் ரிலீஸ் தேதி வதந்திகளுக்கு படக்குழு முற்றுப் புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சலார் 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.  

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து சமூகவலைதளங்களில் வதந்திகள் வெளியான நிலையில் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஜிஎஸ் சினிமாஸில் இது குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →