செய்திகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டிரைலர் வெளியானது ! 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டிரைலர் வெளியானது. 

DIN

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் பிரதானமாக நடித்துவரும் இவரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தினை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

சந்திரா ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்திருந்தது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருந்தது. இந்தப் படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி, மோகன்ராஜா,  ரித்திகா ஆகியோர் நடித்துள்ளனர். 

தற்போது சக்தி பிலிம் பேக்டரி இந்தப் படத்தினை வெளியிடுகிறது. மே.19ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாகுமென கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT