செய்திகள்

பிரபல சீரியல் நடிகை விஜயலட்சுமி காலமானார்

பிரபல சீரியல் நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

DIN

பிரபல சீரியல் நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

பாரதி கண்ணம்மா மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

முன்னதாக, இவர் சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். சில நாள்களுக்கு முன்பு பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாகவும் கூறப்பட்டது. நேற்று முன் தினம் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். விஜயலட்சுமியின் மறைவுக்கு திரைவுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT