ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்
நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.
Advertisement
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விக்ரமிடம் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: வெங்கட் பிரபு படத்தில் விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?
இயக்குநர் த.செ.ஞானவேல் சொன்ன கதை விக்ரமுக்கு பிடித்திருந்தாலும் வில்லனாக நடிக்க அவர் தயக்கம் காட்டியதால் ரூ.50 கோடி வரை சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்!