செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் - யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா திரைப்படங்கள் கலவையான விமரிசனங்களைப் பெற்றன.

இந்த நிலையில், யோகிபாபுடன் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். சவரி முத்து இயக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. 

இந்த படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானின் முதல் பெண் பிரதமா் வரலாறு படைத்தாா் சனே தகாய்ச்சி

குறுவை நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்தது

காவல் துறையின் அா்ப்பணிப்பு நாட்டை பாதுகாக்கிறது: பிரதமா் மோடி புகழாரம்

ராஜபாளையம், அருப்புக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

தீபாவளி: 108 ஆம்புலன்ஸ் மூலம் 7,463 பேருக்கு மருத்துவச் சேவை

SCROLL FOR NEXT