முகப்பு
செய்திகள்

யாஷிகாவின் சைத்ரா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

யாஷிகா ஆனந்த் பேயாக நடிக்கும் சைத்ரா படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:15 AM
பகிர்:

யாஷிகா ஆனந்த் பேயாக நடிக்கும் சைத்ரா படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துருவகங்கள் பதினாறு படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்த விபத்தில் சிக்கிய யாஷிகா, ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் கடமையை செய் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், கே. மனோகரனின் ‘மார்ஸ் புரோடக்‌ஷன்’ தயாரிப்பில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சைத்ரா’ திரைப்படம் வரும் நவ.17 ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தினை எம். ஜெனித்குமார் எழுதி, இயக்குகிறார். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இப்படத்துக்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சைத்ரா திரைப்படம் 24 மணி நேரத்தில் நடைபெறும் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →