செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் புதிய படத்தின் டிரைலர்!

சதீஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை(நவ.4) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.

DIN

சதீஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை(நவ.4) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.

காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரவீன் சரவணன் இயக்கும் முஸ்தபா முஸ்தபா படத்திலும் நடிகர் சதிஷ் நடித்து வருகிறார். 

தற்போது, நடிகர் சதீஷ் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ் சேவியர் இயக்குகிறார். சென்னையில் பெரும் பொருள்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

மேலும், முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடிக்கின்றனர். 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை(நவ.4) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் நாளை(நவ.4) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT