செய்திகள்

டாப் 5 மதிய நேர சீரியல்கள்!

தமிழ் சின்னத்திரை தொடர்களில் நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொடர் குறித்து தெரியவந்துள்ளது.

DIN


தமிழ் சின்னத்திரை தொடர்களில் நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொடர் குறித்து தெரியவந்துள்ளது.

சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள நண்பகல் நேர தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் பல முன்னணி தொலைக்காட்சிகளும் சின்னத்திரை தொடர்களை பிரதாமனாகக் கொண்டு ஒளிபரப்பாகின்றன. ஒரு நாளில் அதிகபட்சமாக தொடர்களே ஒளிபரப்பாகின்றன. அந்தவகையில் நண்பகல் நேரத்தை பெரும்பாலும் தொடர்களே நிறைக்கின்றன. அந்தத் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். 

நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக ரசிகர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது இலக்கியா தொடர். இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 4.21 புள்ளிகளைப் பெற்றுள்ளது.  

இரண்டாவது இடத்தில் அருவி தொடர் உள்ளது. நடிகை சோனியா விக்ரம் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அருவி தொடர் 3.61 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

மூன்றாவது இடத்தில் மலர் தொடர் உள்ளது. இந்தத் தொடரில் பிரீத்தி ஷர்மா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். மலர் தொடர் 3.33 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

நான்காவது இடத்தில் பிரியமான தோழி தொடர் உள்ளது. சாண்ட்ரா பாபு - விக்கி ரோஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 3.41 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

ஐந்தாவது இடத்தில் புதுவசந்தம் தொடர் உள்ளது. இந்தத் தொடரில் சோனியா சுரேஷ் - ஷியாம் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றன. புதுவசந்தம் தொடர் டிஆர்பி பட்டியலில் 3.93 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT