கமல் 234 படத் தலைப்பு அறிவிப்பு!
கமல் 234 படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
கமல் 234 படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோவை கமலின் பிறந்த நாளான நவ.7-ல்(நாளை) வெளியிட உள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், கமல் 234 படத்தின் பெயர் தக் லைஃப் என்று போஸ்டர் வெளியிட்டு ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இப்படத்தின் அறிவிப்பு விடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.