முகப்பு
செய்திகள்

விஜய் 68: தயாரிப்பாளரின் புதிய அப்டேட்! 

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 68’ படத்தின் அப்டேட்டினை கூறியுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா. 

Updated On : 7 நவம்பர், 2023 at 3:46 PM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ்,  சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 

Advertisement

வெங்கட்பிரபு பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மேதை வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பித்துபிடிக்கும் பல படப்பிடிப்பு நாள்கள் இருக்கின்றன தளபதி 68 படத்துக்காக. (அப்டேட்: தாய்லாந்தில் நேற்றைய இரவு முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. பிறந்தநாள் என்பதால் வெங்கட்பிரபுக்கு இன்று விடுமுறை)” எனப் பதிவிட்டுள்ளார். 

கேட்காமலே அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு மிக்க நன்றி என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.