முகப்பு
செய்திகள்

கேப்டன் மில்லர் - பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது

செய்திகள்

கேப்டன் மில்லர் - பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:


அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு  கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

மேலும், இப்படத்திற்கான தன் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இதன் புரோமோஷன் பணிகளை மேற்கொள்ள தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் பகுதியாக, கேப்டன் மில்லரின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →