செய்திகள்

நிறைய இழப்பைத் தாண்டி உருவானது ‘லேபில்’ தொடர்: அருண்ராஜா காமராஜ்

நிறைய இழப்புகளைத் தாண்டி லேபில் இணையத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

நிறைய இழப்புகளைத் தாண்டி லேபில் இணையத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும் 'லேபில்' இணையத் தொடர் நாளை(நவ. 10) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த தொடருக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் தினேஷ்.

லேபில் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது:  

“லேபில் எனது மூன்றாவது படைப்பு. ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டு வருகிறேன். நடிகர் ஜெய் இந்த படைப்பின் மூலம் நண்பராகக் கிடைத்துள்ளார். இதற்கு முன், வேட்டை மன்னனில் உதவி இயக்குநராக இருந்தபோது அவர் நடிகராக இருந்தார். இப்போது அவரை இயக்கும்போது எனக்காகக் கூடுதலாக உழைத்துள்ளார். எங்கள் படக்குழுவில் நிறைய இழப்பு நேர்ந்திருக்கிறது. அதைத்தாண்டி, உங்களுக்காக இந்த தொடரை உருவாக்கியுள்ளோம். உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.”

இந்த தொடரில், நடிகர் ஜெய் மற்றும் தான்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT