செய்திகள்

அதிர்ஷ்டமும் இல்லை, அறிவும் இல்லை: ஜப்பான் படத் தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

DIN

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நேற்று (நவ.10) வெளியானது. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

ஜப்பான் படம் மோசமாக உள்ளதாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் படத்தின் தயாரிப்பாளரையும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். 2019இல் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பகிர்ந்த நக்கலான ட்விட் (எக்ஸ்) பதிவே இதற்கு காரணம். 

2019இல் விஜய்யின் பிகில் படமும் கார்த்தியின் கைதி படமும் வெளியானது. பிகில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கலக்கியது. கைதி இரண்டிலும் பட்டையை கிளப்பியது. அப்போது ரசிகர் ஒருவர் தவறுதலாக பிகில் படத்துக்கு பதிலாக கைதி படத்தினை புக்கிங் செய்துவிட்டதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சூர்யா, கார்த்தியை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவுக்கு எஸ்.ஆர்.பிரபு, “தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ” என கிண்டலாக பதிலளித்திருந்தார். 

பிகில் படம் பார்ப்பவர்களுக்கு அறிவில்லை எனக் கூறிய இவரது தயாரிப்பில் இப்படி மோசமான படம் வெளியாகவே விஜய் ரசிகர்கள், “உங்களுக்கு அதிர்ஷ்டமும் இல்லை, அறிவும் இல்லை” என கிண்டல் செய்து வருகிறார்கள். 

விஜய் ரசிகர்கள் தவிர்த்து சாதாரண இணையவாசிகளும் இவர்களுடன் சேர்ந்து, “நான் ஜிகர்தண்டா படத்துக்கு சென்றேன். எனக்கு அறிவும் இருக்கு. அதிர்ஷ்டமும் இருக்கு” எனப் பதிவிட்டு வருகிறார்கள். 

வாழ்க்கை ஒரு வட்டம்; கர்மா இப்படித்தான் திருப்பிக் கொடுக்கும் எனவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT