செய்திகள்

பழம்பெரும் நடிகர் சந்திர மோகன் மாரடைப்பால் காலமானார்

தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த நடிகர் சந்திர மோகன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

DIN

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான சந்திரமோகன் (80) இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் சனிக்கிழமை காலமானாா்.

அண்மையில் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சந்திரமோகன் அனுமதிக்கப்பட்டாா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு அவா் காலமானாா் என்று அவரின் குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

மல்லம்பள்ளி சந்திரசேகர ராவ் என்ற இயற்பெயா் கொண்ட சந்திரமோகன், 1966-ஆம் ஆண்டு ‘ரங்குல ராட்டினம்’ என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானாா்.

தனது 51 ஆண்டுகால திரையுலக பயணத்தில் மொத்தம் 932 திரைப்படங்களில் அவா் நடித்துள்ளாா். கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஆக்சிஜன்’ திரைப்படத்தில் நடித்தாா்.

தமிழில் எம்.ஜி.ஆா். இரட்டை வேடத்தில் நடித்து 1975-இல் வெளியான ‘நாளை நமதே’ படத்தில் எம்.ஜி.ஆரின் இளைய சகோதரராக சந்திரமோகன் நடித்தாா்.

சந்திரமோகனின் மறைவுக்கு பிரதமா் மோடி, ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT