செய்திகள்

இயக்குநர்களின் பாராட்டு மழையில் ஜிகர்தண்டா! 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பிரபல இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர். 

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார்கள். 

நவ.10ஆம் நாள் வெளியான இந்தப்படத்துக்கு பெருவாரியான ஆதரவுகள் குவிந்துள்ள நிலையில் பிரபல தமிழ் சினிமா இயக்குநர்களும் ஜிகர்தண்டா படத்தினை பாராட்டி வருகின்றனர். 

ஷங்கர்: 

“கார்த்திக் சுப்புராஜின் சிறந்த, அற்புதமான திரைக்கதை மற்றும் இயக்கம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கதை- சினிமாவை மதித்தல். எதிர்பாராத 2ஆம் பகுதி. இரண்டு கதாபாத்திரங்களுக்கு மத்தியாலான டிராமா சூப்பராக இருந்தது. சந்தோஷ் நாராயணின பின்னணி இசை அற்புதமாக இருந்தது.  லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு சிறப்பு” எனக் கூறியுள்ளார். 

நெல்சன்: 

ஜிகர்தண்டா படத்தின் புதுமையான கதைக்களத்தினாலும் படத்தின் கிராப்ட்டையும் மிகவும் ரசித்து பார்த்தேன். மேலும் சிறப்பாக நடித்திருந்தார்கள். கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள். 

மாரி செல்வராஜ்: 

கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா பட வெற்றிக்கு மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது.  சந்தோஷ் நாராயணின் இசை பழைய நினவுகளை வெளிக்கொணர்ந்தது. அற்புதமான நடிப்பு. 

மேலும் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அறிவழகன் போன்றோரும் படத்தினை வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT