செய்திகள்

ஹாலிவுட் தரத்தில் ஷாருக்கான்-விஜய் படம்: அட்லியின் அடுத்த அப்டேட்! 

இயக்குநர் அட்லி நடிகர்கள் ஷாருக்கான், விஜய்யினை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். 

DIN

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான்.

உலகம் முழுவதும் ரூ.1,140 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இயக்குநர் அட்லி இணைய நேர்காணல் ஒன்றில், “என் பிறந்த்நாள் விழாவில் ஷாருக்கான் சார், விஜய் சார் சந்தித்தார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் எனத் தெரியாது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு ஷாருக்கான் சார் என்னை அழைத்து ‘நீ இரண்டு நாயகர்கள் வைத்து படம் எடுப்பதாக இருந்தால் சொல் நாங்கள் நடிக்க தயாராக இருக்கிறோம்’ எனக் கூறினார். விஜய் சாரும் ‘ஆமாபா நாங்க ரெடி’ எனக் கூறினார். நான் உண்மையாகவே இந்தப் படத்துக்காக உழைத்து வருகிறேன். ஆனால் இன்னும் இந்தப்படம் உறிதியாகவில்லை. அதற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன். நல்ல கதை அமைந்தால் இது நடக்கும். 

ஜவான் சண்டைப் பயிற்சியாளர் எனது படத்தினை அவர்களது நண்பர்களுக்கு காட்டியுள்ளார். அங்கு படம் பார்த்த அவரது நண்பர்களான ஆஸ்கர் விருது பெற்ற பல்வேறு கலைஞர்களுக்கும் ஜவான் பிடித்திருக்கிறது. அதனால் அங்கிருந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியிருக்கிறார்கள். பார்ப்போம்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

தவெக மாநாடு! 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்தது... கார் சேதம்!

மதுரை தவெக மாநாட்டுக்காக வீதிகளில் பிரசார வாகன உலா!

கண்கள் கவரும்... ஷெஹனாஸ்!

SCROLL FOR NEXT