செய்திகள்

நன்றி பொண்டாட்டி: நடிகர் சூர்யாவின் வைரல் பதிவு! 

நடிகர் சூர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

DIN

நீண்ட நாள்களாக காதலித்துவந்த நடிகர் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா என்ற மகனும் , தேவ் என்ற மகளும் இருக்கிறார்கள். 

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன்  ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோதிகா உடற்பயிற்சி மையத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட விடியோ வைரலானது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதலர்கள் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்க்கைய வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு 2 மணி நேரத்தில் 6 இலட்சத்துக்கும் அதிகமான லைக் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? -கனிமொழி எம்.பி. கண்டனம்!

வெட்கச் சிரிப்பில்.... அனுமோள்!

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

SCROLL FOR NEXT