செய்திகள்

அனிமல் படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு! 

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் 2017இல் வெளியான அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் டீசர் கவனம் பெற்ற நிலையில் டிரைலர் வரும் நவ.23ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் டிச.1ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT