முகப்பு
செய்திகள்

வெளியானது அனிமல் படத்தின் டிரைலர்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 23 நவம்பர், 2023 at 2:29 PM
அனிமல் படத்தில் ரன்பீர் கபூர்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:54 AM

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்கக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அனிமல் படத்தின் டிரைலர் காட்சி

இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல்  வில்லனாக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் டிச.1-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.