செய்திகள்

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சதிஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சதிஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படத்திற்கு 'கான்ஜுரிங் கண்ணப்பன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

 'கான்ஜூரிங் கண்ணப்பன்' ஏஜிஎஸ்ஸின் 24வது தயாரிப்பு ஆகும். 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் செல்வின் ராஜ் சேவியர், இயக்குநர்கள் சிம்புதேவன், சுமந்த் ராதாகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணன் போன்ற நட்சத்திரங்களுடன் 'நானே வருவேன்" படத்தில் நடித்துள்ள எல்லி ஆவரம், ஜேஸன் ஷா, பிஎனேடிக்ட் காரெட் போன்ற வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் அளித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஓடிடியில் லியோ!

இந்த நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரா்கள் பாதுகாப்புடன் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

விளையாட்டு அரங்கு அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா் அமைச்சா் பி. மூா்த்தி

திருப்பரங்குன்றம் கோயிலில் காா்த்திகை தேரோட்டம்: மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம்

SCROLL FOR NEXT