முகப்பு
செய்திகள்

வைரலாகும் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் புதிய பாடல்!

நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி படத்தின் புதிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
பகிர்:

நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி படத்தின் புதிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் வருகிற டிச.1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அன்னபூரணி படத்திலிருந்து ‘உலகை வெல்ல போகிறாள்’ என்ற பாடல்  முன்னதாக வெளியானது. 

இந்த நிலையில், அன்னபூரணி படத்திலிருந்து 'லைஃப் இஸ் ஆன்' என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஸ்ரீனிதா, ஷிவாத்மிகா, ஹார்ஷினி, கோகுல் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.