செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் வெளியீடு எப்போது?

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன. ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது. 

தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

மாவீரன் இசை வெளியீட்டு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் நல்ல உடற்கட்டுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைக்கு குல்லா அணிந்திருப்பார். எனவே ‘எஸ்கே 21’ படத்தில் புதிய தோற்றம் நிச்சயம் என அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. எஸ்கே 21 படத்துக்காகத்தான் இந்த லுக்கில் இருப்பதாக தகவல் வெளியானது.  அது உண்மையா அல்லது எடிட் செய்யப்பட்டதா என படக்குழு எதுவும் கூறவில்லை.  

இந்நிலையில் இந்தப் படம் 2024 ஆகஸ்ட் மாதம் வெளியாகுமென புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென் எதிர்பார்க்கப்படுகிறது. 

பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT