முகப்பு
செய்திகள்

நயன்தாராவின் 75-வது படம்: வெளியானது 'அன்னபூரணி' டிரைலர்

நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 நவம்பர், 2023 at 9:51 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

நயன்தாராவின் 75வது படமாக அன்னபூரணி படம் உருவாகி வருகிறது. படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிக்க படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் செஃபாக நடிகை நயன்தாரா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். 

Advertisement

படம் வருகிற டிச.1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.