செய்திகள்

நடிகர் பிரபு மகளை மணக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. 

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் வருகிற டிச.15 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா பிரபு, அவரது அத்தை மகன் குணாலைத் திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT