செய்திகள்

ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: பாரதிராஜா

இயக்குநர் அமீரை ஆதரித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DIN

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து, அமீருக்கு இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன்  உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

"திரு.ஞானவேல் அவர்களே, பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சனை மட்டுமே, ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமீர் உங்கள் படத்தில்தான் வேலை கற்றுக்கொண்டார் என்பதை எக்காளமாகக் கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும். ஏனென்றால், உண்மையான படைப்பாளிகள் சாகும்வரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள். மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்னையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT