செய்திகள்

நிறைவடையும் கண்ணே கலைமானே தொடர்: புது சீரியல் இதுதான்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடர் நிறைவடையவுள்ளதால், இதற்கு மாற்றாக புதிய தொடரொன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடர் நிறைவடையவுள்ளதால், புதிய தொடரொன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

சின்னத்திரை  தொடர்கள் எல்லாமே வித்தியாசமான கதைக் களத்தை கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் விஜய் டிவி மற்றும் சன் டிவி தொடர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

ஈரமான ரோஜாவே சீரியலை தொடர்ந்து, கண்ணே கலைமானே தொடரும் நிறைவடையவுள்ளது. இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. 

கண்ணே கலைமானே தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் இத்தொடரின் கதாநாயகன் மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த சீரியல் திடீரென்று நிறைவடையவுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் துவங்கப்பட்ட கண்ணே கலைமானே தொடர் 350 எபிசோடுகளை கடந்துள்ளது. டிஆர்பி இல்லாததால் இத்தொடர் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கண்ணே கலைமானே தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் வரும் டிச.4 முதல் மதியம் 1.30 மணிக்கு சக்திவேல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT