செய்திகள்

பிரபல நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை!

பிரபலங்களான கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

பிரபலங்களான கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமானவர் நிஷா. இவர் பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் சமீபத்தில், ஹன்சிகா நடிப்பில் வெளியான மை3 வெப் தொடரிலும் நடித்து இருந்தார். இவர் நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு ஏற்கெனவே சமைரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், நிஷா இரண்டாவதாக கருவுற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, கணேஷ் வெங்கட்ராம் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், "நான் வாழ்க்கையில் ஆற்றிய கதாபாத்திரங்கள் பல.....ஆனால் தந்தை என்பது எவருடனும் ஒப்பிடமுடியாதது." எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT