செய்திகள்

லியோ டிரைலர்.. சம்பவம் உறுதி: அனிருத்

லியோ படத்தின் டிரைலர் குறித்து இசையமைப்பாளர் அனிருத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

லியோ திரைப்படத்திற்கான  சென்சார் இன்று (அக்.3) நடைபெற்ற நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தன் எக்ஸ் தளத்தில், “சம்பவம் உறுதி” என லியோ டிரைலர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் வசன எழுத்தாளரான இயக்குநர் தீரஜ் வைத்தி, ‘லியோ டிரைலரைப் பார்த்தேன். உங்கள் தாவம்பட்டை தரையில் இருக்கப்போகிறது’ எனக் கூறியிருந்தார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லியோ டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்கு செல்லவே தேவையில்லை: அணி உரிமையாளர்

சூரியன் மறையும் வேளை... அனந்திகா சனில்குமார்!

6 நாள்களுக்கு கனமழை! தமிழகத்திற்கு எச்சரிக்கை! | செய்திகள்: சில வரிகளில் | 20.11.25

SCROLL FOR NEXT