செய்திகள்

தனுஷ் இயக்கும் புதிய தொடர்! அக்.9 முதல் ஒளிபரப்பு!!

கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிகை மனீஷா மகேஷ் நடிக்கிறார்

DIN

சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே என்ற புதிய தொடர் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவ்வபோது புதிய தொடர்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சன் தொலைக்காட்சியில் தற்போது சிங்கப் பெண்ணே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் இரவு 8 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. 

சன் தொலைக்காட்சியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் ஒரு தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிகை மனீஷா மகேஷ் நடிக்கிறார். கிராமத்தில் சுட்டித்தனங்கள் செய்யும் குறும்புக்கார பெண்ணாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது

மிராகல் மீடியா தயாரிப்பில் இயக்குநர் தனுஷ் இந்தத்தொடரை இயக்குகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய கண்ணான கண்ணே தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT