கோப்புப்படம் 
செய்திகள்

லியோ வசன சர்ச்சை பெரிய விஷயமல்ல - சீமான்  

லியோ டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் பெரிய விஷயமல்ல என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

DIN

லியோ டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் பெரிய விஷயமல்ல என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை 37 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 

படம் அக்.19 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இருப்பினும், டிரைலரில் நடிகர் விஜய் கடுமையான தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெண்களை இழிவுப்படுத்தும் இந்த வார்த்தையை விஜய் பேசியிருக்கக் கூடாது என்றும் பல குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருப்பவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் லியோ டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் பெரிய விஷயமல்ல என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சர்ச்சை வசனம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய நிலையில் சினிமா உள்ளது. லியோ டிரைலரில் இடம்பெற்ற வசனத்தை தணிக்கைக் குழு நீக்கியிருக்க வேண்டும் அல்லது ஒலி அமைதி படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT