முகப்பு
செய்திகள்

ஜிவி 25 படத்தின் தலைப்பை அறிவிக்கும் கமல்ஹாசன்!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:17 PM
கோப்புப்படம்
பகிர்:

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி 25 படத்தை கமல் பிரகாஷ்  எழுதி, இயக்குகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் நாளை (அக்.9) மாலை 6 மணிக்கு வெளியிடுவார் என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் தெரியவரும்.

முழு கட்டுரையைப் படிக்க →