செய்திகள்

லியோ 3வது பாடல் எப்போது?: அதிகாரபூர்வ அறிவிப்பு!

லியோ படத்தின் 3வது பாடல் குறித்து படக்குழு அப்டேட் கூறியுள்ளது. 

DIN


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. 

டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் விஜய் பேசிய ஒரு வார்த்தையும் சர்ச்சையானது.  

அனிருத் இசையமைக்கும் லியோவின் முதல் பாடலான நான் ரெடி 100 மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. 2வது பாடலான ஆங்கில எழுத்தில் துவக்கும் ‘பேட் ஆஸ்’ பாடலும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. 

இந்நிலையில் 3வது பாடலான ‘அன்பெனும்’ பாடல் நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடம் இருக்குமென லோகேஷ் கூறியிருந்தார். 

லியோவில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவளா்ச்சிப்பட்டியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக திருச்சி - பழைய கரூா் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

அடுத்த நிதியாண்டில் 7.2% பொருளாதார வளா்ச்சி : பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்பு: 31-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT