செய்திகள்

லியோவில் விஜய் சம்பளம் இவ்வளவா?

லியோ படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

DIN


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரம், டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தையும் சர்ச்சையானது. இப்படம் அக்.19 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய பகுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வசனம் எழுதிய இயக்குநர்கள் ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ரத்னகுமார், “ஒருநாள் விஜய் சார் நடித்த முந்தையைப் படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,  விஜய் நடிக்கிறார் என்பதற்காகவே குறிப்பிட்ட கோணத்தில் பல பிரம்மாண்ட காட்சிகள் எடுக்கப்பட்டிருந்ததையும் அதனால் உணர்ச்சிகர காட்சிகள் சரியாக வரவில்லை என நண்பர் குறிப்பிட்டார். இதற்கு லோகேஷ், ரூ.130 கோடி சம்பளம் ஒருவரைக் (விஜய்) கூட்டி வந்து நடிக்க வைக்கிறோம் என்றால் அவர்தான் பிரம்மாண்டம். அவரைத்தான் பெரிதாகக் காட்ட வேண்டும் எனக் கூறினார்.” என தெரிவித்துள்ளார். 

இதனால், லியோ படத்திற்கு விஜய் ரூ.130 கோடி சம்பளம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT