நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் பேசியிருந்த தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது டிரைலரில் அந்த வார்த்தை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது.
நேற்று (அக்.11) லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டது. அதில், நடிகர் விஜய் என்பதற்கு பதிலாக ‘தளபதி விஜய்’ என குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையானது.
இதையும் படிக்க | தளபதி விஜய்... சர்ச்சையில் அரசாணை!
இந்த நிலையில், வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனம் அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு கொடுக்க வேண்டிய தொகையைத் தரமால் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிப்படைந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ, லியோ படத்தின் ஆந்திர வெளியீட்டைக் கைப்பற்றிய சித்தாரா எண்டர்டெயிண்ட் நிறுவனத்திற்குத் தன் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை: பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!
மேலும், ஆந்திர திரையுலகில் தனி செல்வாக்குடன் இருக்கும் தில் ராஜூ, சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அங்கு லியோ வெளியாவது சிரமம் என்றும் கூறி வருகின்றனர். இதற்கிடையில், லியோ தயாரிப்பாளார் செவன் ஸ்கீரின் லலித் குமார், தில் ராஜூவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.