செய்திகள்

தளபதி விஜய்... சர்ச்சையில் அரசாணை!

லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து வெளியான தமிழக அரசாணையில்  ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

DIN

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்  த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் பேசியிருந்த தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது டிரைலரில் அந்த வார்த்தை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று (அக்.11) லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டது. அதில், நடிகர் விஜய் என்பதற்கு பதிலாக ‘தளபதி விஜய்’ என குறிப்பிட்டிருந்தனர். 

இதனை, விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கினாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுவினரால் ‘தளபதி’ என்றழைப்பட்டு வருவதால், விஜய்யை தளபதி எனக்குறிப்பிட்டு அரசாணையை தயார் செய்த அதிகாரி மீது துறை சார்ந்த  நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT