செய்திகள்

முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள்: ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த லோகேஷ் கனகராஜ்! 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

DIN

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்  த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் பேசியிருந்த தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது டிரைலரில் அந்த வார்த்தை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது. 

லோகேஷ் நேர்காணல் ஒன்றில், “ரசிகர்கள் முன்கூட்டியே திரையரங்குகளுக்கு வந்துவிடுங்கள். முதல் 10 நிமிடங்கள் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். இதற்காகதான் 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் உழைத்து இருக்கிறோம். கடந்த அக்டோபர் முதல் இந்த அக்டோபர் வரை அதற்காகதான் உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார். 

இது அநேகமாக கழுதைப்புலி கிராபிக்ஸ் காட்சிகளாக இருக்குமோ என இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT