செய்திகள்

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஜெயராம்!

மார்கோனி மத்தாய் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் ஜெயராம் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

DIN

இயக்குநர் மிஷ்கின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் லியோ, சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்த மிஷ்கின் மீண்டும் படங்களை இயக்குகிறார். 

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் படம் இயக்க உள்ளார் மிஷ்கின். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மார்கோனி மத்தாய் என்ற மலையாளப் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், ஜெயராமும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT