செய்திகள்

லியோவில் முற்றிலும் மாறுபட்ட விஜய்யை பார்க்கலாம்: லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. 

டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் விஜய் பேசிய ஒரு வார்த்தையும் சர்ச்சையானது.  

படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடம் இருக்குமென லோகேஷ் கூறியிருந்தார். மேலும், நேர்காணல் ஒன்றில், “ இதுவரை பார்க்காத முற்றிலும் மாறுபட்ட விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கலாம். ஒர் முக்கியமான 7 நிமிட காட்சியை ஒரே டேக்கில் முடித்து விட்டார். நாம் எதிர்பார்ப்பதை விடவும் சிறந்த நடிகர். அவரால் அன்றைய படப்பிடிப்பு விரைவிலேயே முடிந்து விட்டது.

இவ்வளவு விரைவாக முடிப்பாரென நான் நினைக்கவில்லை. அன்றைய நாளுக்கு மாற்றுத் திட்டம் இல்லாததால் அனைவருக்கும் அன்றொருநாள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. அவருக்கான தீனியை நாம்தான் சரியாக போடாமல் இருக்கிறோம். அடுத்த முறையும் விஜய்ணாவுடன் இணைந்தால் இதை விடவும் பர்பாமென்ஸ் செய்யும் கதையாகத்தான் இருக்கும்” எனக் கூறினார். 

லியோவில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கும்பம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - மகரம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

SCROLL FOR NEXT