செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பரிசு: வைல்டு கார்டில் செல்கிறாரா இவர்?

பிரபல சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பரிசுப் பொருள் வந்துள்ளது.

DIN

பிரபல சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பரிசுப் பொருள் வந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த சீசன்களை போல் இல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. 

முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

பவா செல்லத்துரை வெளியேறியதால், இந்த வாரம் வெளியேற்றம் கிடையாது(No Elimination) என்ற அறிவிப்பை முன்னதாக நிகழ்ச்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாஞ்சில் விஜயன், பிக் பாஸிலிருந்து பரிசுப்பொருள் ஒன்று வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஆனால், பரிசுப்பொருள் என்ன என்பதை நாஞ்சில் விஜயன் தெரிவிக்கவில்லை.  

பிக் பாஸிலிருந்து நிகழ்ச்சியில் இருந்து பரிசுப்பொருள் வந்ததால், வைல்டு கார்டு மூலம் நாஞ்சில் விஜயன் செல்லவுள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்த நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லமாட்டார் எனவும் சிலர் கூறி  வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT