கோப்புப் படம் 
செய்திகள்

திரைப்பட கதாநாயகியாகும் செம்பருத்தி சீரியல் நடிகை!

செம்பருத்தி சீரியல் நடிகை சந்தானத்தின் ஜோடியாக நடிப்பதன் மூலம் திரைப்பட கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

DIN

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதையடுத்து சந்தானம் இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார். எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியாலயா நடிக்கிறார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் நடிகையாவார். சந்தானம் படத்தில் நடிப்பதன் மூலம் பிரியாலயா சின்னத்திரையில் இருந்து திரைப்பட கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

தம்பி ராமையா, முனீஷ் காந்த், மாறன்,  விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ஓம் நாராயண் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் தலைப்பு, முதல் தோற்றம் மற்றும் வெளியிடும் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. 

பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகிய நடிகைகள் ஏற்கனவே சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்ற நிலையில், தற்போது பிரியாலயாவும் அந்த வரிசையில் இணைய உள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆபரேஷன் சிந்தூர்: 3 - 12 வகுப்புகளுக்கு சிறப்பு பாடத் தொகுப்பு!

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

SCROLL FOR NEXT