செய்திகள்

கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாகும் கமல் 234 பட அப்டேட்! 

கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் கமல் 234 படத்தின் புதிய அறிவிப்பு கமலின் பிறந்தநாளன்று வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

DIN


விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.  கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கமலின் 234வது படம் குறித்து, “நாயகனை மிஞ்சும் ஒரு படத்தில்தான் நாங்கள் இணைய இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம்” எனக் கமல்ஹாசன் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் முதல் பார்வைக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் கமலின் பிறந்தநாளான நவ.7இல் அறிமுக விடியோவினை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்குப் பிறகு ரவி கே. சந்திரன் 3வது முறையாக மணிரத்னமுடன் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT