செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன் - விக்கியின் கூழாங்கல்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

DIN

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அறிமுக நடிகர்களான செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு, ஜெய பார்த்திபன் மற்றும்  விக்னேஷ் குமுலாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில்  கலந்துகொண்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில், டைகர் விருதில் புதிய இயக்குநருக்கான விருதை பி.எஸ்.வினோத்ராஜ் பெற்றார்.

இந்த நிலையில், கூழாங்கல் திரைப்படம் நேரடியாக  சோனி லைவ் ஓடிடியில் வரும் அக்.27 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT