செய்திகள்

இணையத்தில் வைரலாகும் லேபில் தொடரின் டிரைலர்!

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லேபில்' தொடரின் டிரெய்லர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லேபில்' தொடரின் டிரெய்லர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்த தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,  தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்த தொடருக்கு, திரைக்கதையை  இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் முதல் வெப் தொடர் லேபில் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளது. இதன் இசையை சாம் சிஎஸ் கையாண்டுள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். 

மேலும், இந்த வெப் தொடரில்  மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

SCROLL FOR NEXT