லியோ - மிரள வைக்கும் வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லியோ முதல்நாள் வசூலில் இந்திய சினிமாவில் அதிக வசூலித்த படமாக சாதனை படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது.
தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி துவங்கியது.
இதையும் படிக்க: கமல் - மணிரத்னம் படத்தின் அப்டேட்!
ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம்
இந்நிலையில், உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக முதல்நாள் வசூலைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.