பெரும் ஆதரவுக்கு நன்றி: மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சி!
லியோ படத்தில் நடித்ததுக்காக ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெறும் நடிகை மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றவரும் ஆவார். தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் அது மேலும் கூடியது. பின்னர் அவர் நடித்த தமிழ்ப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி!
Advertisement
Advertisement
உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சம்பளம் போதும்; பட வெற்றிக்காக பரிசுகள் தேவையில்லை: நடிகர் விஜய்
லியோவில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக ஆரம்பத்தில் பொய்யான தகவலாக இருந்த நிலையில் அவர் நிஜமாகவே நடித்திருப்பது ரசிர்களுக்கு விருந்தாக இருந்தது. குறைவான நேரம் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
இதையும் படிக்க: லியோ ரூ.1,000 கோடி வசூலிக்காது: தயாரிப்பாளர் லலித்
பெரும் ஆதரவினை தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியன் தனது எக்ஸ் பதிவில், “லியோவுக்காக எனக்கு வரும் அதீத பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இந்த அற்புதமான அனுபவத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.