செய்திகள்

லியோ இசை நகல் எடுக்கப்பட்டதா?: சர்ச்சையில் அனிருத்!

லியோ படத்தின் பாடல், பிரபல இசையமைப்பாளரிடமிருந்து நகல் எடுக்கப்பட்டது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

DIN

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வெளியான லியோ படத்தின் ‘ஆர்டனரி பர்சன்’ என்கிற பாடல், ஐரோப்பிய இசையமைப்பாளர் பாடலிலிருந்து நகல் எடுக்கப்பட்டது என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  
 
நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லியோ. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில், படத்தின் ஒரு பாடல் ஐரோப்பிய இசையமைப்பாளர் ஒட்னிகா என்பவரின் ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஒட்னிகா. இவர் இசையமைத்து வெளியிட்ட ஆல்பம் `வேர் ஆர் யூ’  

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகிய ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ என்கிற இணையத்தொடரில் ‘ஐ ஆம் நாட் அவுட்சைடர்’ பாடலாகப் பயன்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், லியோ படம் வெளியான பிறகு, ஒட்னிகாவின் யூடுயூப் பக்கத்தில் அனிருத் பாடலை ரசிகர்கள் சுட்டி காட்டினர். 

ஒட்னிகாவின் பதில்

அதனை கவனித்த ஒட்னிகா, ``படத்தில் யாரும் அனுமதியின்றி இந்த இசையைப் பயன்படுத்தியுள்ளார்களா? தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒட்னிகாவின் பதில்

இன்னொரு பதிவர், “இது முறையாக உரிமை வாங்கப்பட்டு மாறுதல் செய்யப்பட்டது தான். வெளிநாடுகளில் இது வழக்கம்” எனப் பதிவிட்டுள்ளார். 

அதற்கு பதில் அளித்துள்ள ஒட்னிகா, “கலைஞரின் அனுமதியில்லாமல் இந்த இசையின் உரிமையை நகல் எடுக்கவோ உரிமம் பெறவோ இயலாது. என்னையோ குழுவினரையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT